கேள்விபத்திரம் தொடர்பான குற்றச்சாட்டு : லிட்ரோ நிறுவனம் மறுப்பு

லிட்ரோ எரிவாயு இறக்குமதி செய்த கேள்விபத்திரம் மூலம் முறைகேடுகள் இடம்பெற்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிராகரிப்பதாக அதன் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

லிட்ரோ எரிவாயு இறக்குமதி செய்த கேள்விபத்திரம் மூலம் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் கணக்காய்வு அறிக்கை முன்வைக்கப்பட்டதன் பின்னர் அது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என கோப் குழுவின் தலைவர் சரித்த ஹேரத் தெரிவித்திருந்தார்.

அதற்குபதில் வழங்கிய லிட்ரோ நிறுவனத்தின் தலைவர், அந்த குற்றச்சாட்டு மூலம் தமது நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆயிரத்து 975 மெட்ரிக் தொன் எரிவாயு பணம் செலுத்தி கொண்டு வரப்பட்டுள்ளது.

தம்மிடம் அதற்கான பற்றுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
Published from Blogger Prime Android App