வடக்கு மாணவர்களுக்கு சிங்கப்பூர் பல்கலையில் உயர் கல்வியை பெற்றுக்கொடுக்க ஆளுநர் திட்டம் !

ஆசியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கும் சிங்கப்பூரிலுள்ள நன்யாங் பல்கலைக்கழகத்தில் வடக்கு மாணவர்களுக்கு உயர் கல்வியைப் பெற்றுக் கொடுப்பதற்கு மேற்படி பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணியாற்ற வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தீர்மானித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்குச் சென்ற வடக்கு ஆளுநர் அங்கு பல்வேறு சந்திப்புகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் சிங்கப்பூரின் பிரபலம் வாய்ந்த ஆசியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கும் நன்யாங் பல்கலைக்கழகத்துக்கு கடந்த புதன்கிழமை ஆளுநர் ஜீவன் தியாகராஜா விஜயம் செய்தார்.

குறித்த பல்கலைக்கழகத்தில் வடக்கில் தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு உயர் கல்வியை பெற்றுக்கொடுப்பதற்கும் பல்கலைக் கழகத்தின் தொழில்நுட்ப உதவியை வட மாகாணத்துக்குப் பெற்றுக்கொள்வதற்கும் ஆளுநர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Published from Blogger Prime Android App