கொலைச் சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில் ஆராய விசேட பொலிஸ் குழுக்கள் !

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளொன்றுக்கு 25 வீடுடைப்பு மற்றும் தங்கச் சங்கிலிகளை பறிக்கும் சம்பவங்கள் பதிவாகுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களே இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்தப்படுகின்றமை அதிகரித்துள்ளது. இதனிடையே, அண்மைக் காலமாக தென் மாகாணத்தில் இடம்பெறும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எஸ்.ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடையிலான முரண்பாடுகளே இந்தக் கொலைச் சம்பவங்களுக்கான காரணமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Published from Blogger Prime Android App