புலம்பெயர்ந்து வாழும் மக்கள் உதவ வேண்டும் – மனோ கணேசன்

இலங்கை பன்மைத்துவ நாடு என்ற நிலைக்கு சட்டப்படி மாறுவதிலேயே இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார மீட்சி இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்களுடனான சந்திப்பொன்றில் உரையாற்றிய போதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இதனை கூறியுள்ளார்.

இலங்கையில் நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போது, அதற்கு ஆதரவாக உலகெங்கிலும் வாழும் புலம்பெயர் சிங்கள மக்களும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று இலங்கை ஒரு பன்மைத்துவ நாடாக சட்டபூர்வமாக மாறுவதற்கும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் உதவ வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Published from Blogger Prime Android App