இலங்கையை கேலிக்கூத்தாக்கும் சர்வதேசம் : விமல் எம்.பி.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவரும் மற்றுமொரு நபரும் அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் கைகளில் கௌபி விதைகளை வீசி இலங்கையை கேலி செய்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அதைப் பார்த்ததும் இதயம் உடைந்தது என்றும் அவர் கூறினார்.

அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் யாசகனைனைப் போன்று யாசகம் எடுப்பதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், எம்மைப் போன்ற நாடுகள் அந்தவகையில் சர்வதேசத்தால் கேலிக்கூத்தாக்கப் படுவதாகத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
Published from Blogger Prime Android App