நாமல் உள்ளிட்ட மேலும் சிலர் விரைவில் அமைச்சர்களாக பதவியேற்பு – பிரசன்ன !

நாட்டில் மேலும் சில அமைச்சரவை அமைச்சர்கள் விரைவில் பதவியேற்பார்கள் என நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும் அமைச்சுப் பதவி கிடைக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்புக்கு அமைவாக ஜனாதிபதி 30 அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Published from Blogger Prime Android App