கோதுமை மாவின் விலை அடுத்த வாரம் குறைவடையும் சாத்தியம்

கோதுமை மாவின் விலை அடுத்த வாரம் முதல் குறைவடையக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தையில் கோதுமை மாவின் விலை கடுமையான உயர்வினை எட்டியுள்ளதாலும், கோதுமை மா பற்றாக்குறையினாலும் பொதுமக்கள் மற்றும் பேக்கரி தொழிற்துறையுடன் ஈடுபடுவோர் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலையில் முன்பதிவு செய்யப்பட்ட கோதுமை மா துறைமுகத்திற்கு வந்துள்ளதன் காரணமாக அடுத்த வாரம் முதல் கோதுமையின் விலை குறைவடையும் என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட கோதுமை மா கடந்த வாரம் நாட்டிற்கு வந்துள்ளது.

மேலும் கடந்த மாதங்களில் கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் முன்பதிவு செய்யாமையினால், நாட்டில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 350 – 400 ரூபா வரை அதிகரித்தது.

எவ்வாறாயினும், கொழும்பு 4ஆம் குறுக்குத் தெரு இறக்குமதியாளர்கள் கோதுமை மாவை முன்பதிவு செய்து கையிருப்பு பெறுவதால் கிலோ ஒன்றின் விலை 300 ரூபாவிற்கு குறைவடையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Published from Blogger Prime Android App