மத வழிபாட்டு தலங்களில் சூரிய சக்தியிலான மின் படலங்களை பொருத்த நடவடிக்கை !

மத வழிபாட்டு தலங்களில் சூரிய சக்தியிலான மின் படலங்களை பொருத்துவது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மதவழிபாட்டு தலங்களில் சூரிய மின் உற்பத்தி படலங்களை பொருத்துவதற்கான கலந்துரையாடல் ஒன்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சில் இடம்பெற்றது மேலும் இந்தியாவின் கடன் உதவியின் கீழ் இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

இதேவேளை இந்த கலந்துரையாடலில் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, கல்வி இராஜாங்க அமைச்சர், சில அமைச்சுக்களை பிரதிநிதித்துவபடுத்தும் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடதக்கது.
Published from Blogger Prime Android App