தாமரை கோபுரத்தை பார்வையிட சீனர்களுக்கு இலவசம்!தாமரைக் கோபுரத்தை பார்வையிடுவதற்கான போலியான நுழைவுச்சீட்டு ஒன்று சமூகத்தில் பரவி வருவதாக சீன தூதரகம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள சீன தூதரகம், சமூக ஊடகங்களில் பரவும் நுழைவுச்சீட்டு போலியானது என்றும் அதை சமூக ஊடகங்களில் பகிரும் முன் சரிபார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

எவ்வாறாயினும் தாமரை கோபுரம் குறித்த இலவச விளம்பரத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.