பிரித்தானியாவுக்கு பயணமாகும் ஜனாதிபதி ரணில்!
இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வார இறுதியில் பிரித்தானியாவுக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்காக ஜனாதிபதி செயலகம், பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துடன் பயணத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை மகாராணியாரின் இறுதிச்சடங்குகள் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளதோடு இலங்கை அரசாங்கம் அன்றைய தினத்தை தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.