ரணிலின் ஆட்சி ஆறு மாதமே நீடிக்கும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் இந்த அரசாங்கத்தை அதிகபட்சமாக ஆறு மாதங்கள் வரை நீடிக்க முடியும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பொரளையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவது பொருத்தமானதல்ல எனவும், முன்னாள் ஜனாதிபதியை நிம்மதியாக ஓய்வெடுக்க அனைவரும் ஏற்பாடு செய்ய வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Published from Blogger Prime Android App