2021 ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் பகுப்பாய்வில் பாடசாலைப் பரீட்சார்த்திகளின் பெறுபேற்றின் அடிப்படையில் கிழக்கு மாகாணம் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி- புள்ளநாயகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் இச் சாதனைப் பெறுவதற்காக ஆலோசனைகளை வழங்கிய கிழக்குமாகாண ஆளுநர் மற்றும் கிழக்கு மாகாணக் கல்விச் செயலாளர் அவர்களுக்குத் தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார். இதே போன்று கிழக்கு மாகாணத்திலுள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள் போன்றோர். தன்னுடன் இணைந்து இச் சாதனையைப் பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காகவும், அவர்களின் வழிநடத்தலில் அதிபர்கள்;, ஆசிரியர்கள் முன்னின்று உழைத்தமைக்காகவும் தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் தங்களது விடாமுயற்சியும் பெற்றோர்களின் ஊக்குவிப்பும் கிழக்கு மாகாணம் முதலிடத்தைப் பெறுவதற்கு காலாக அமைந்தது. இந்த வகையில் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதுடன் பின்தங்கிய பிரதேசங்களில் மாணவர்களின் அடைவு மட்டங்களை அதிகரிக்க தங்களால் இயன்ற பங்களிப்பினைச் செய்த அரச நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் நன்றினைத் தெரிவித்துள்ளார்.