கடவுச்சீட்டு விநியோகம் அதிகரிப்பு !

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த 8 மாதங்களில் மாத்திரம் 7 இலட்சத்துக்கும் அதிகமான கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இதுவரை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் வருடம் முழுவதுமே ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 168 கடவுச்சீட்டுக்களே விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 7 இலட்சத்திற்கும் அதிகமான கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளளது,

இதன்படி இந்த மாதத்தில் மாத்திரம் கடவுச்சிட்டினை பெற்றுக்கொள்வதற்காக ஒரு இலட்சத்து 16 ஆயிரத்து 244 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
Published from Blogger Prime Android App