ரீம் அப் செயற்பாட்டிற்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு.


பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட சின்னவத்தை முத்தமிழ் வித்தியாலயத்தில் இன்று(07) எஸ்கோ (ESCO) அமைப்பினால் பாடசாலை மாணவர்களின் குழுச் செயற்பாட்டினை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

பாடசாலை அதிபர் த.செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் Team up செயற்பாட்டிற்கான விளையாட்டு உபகரணங்கள் மேற்படி அமைப்பினால் வழங்கிவைக்கப்பட்டன இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர் .
இத்திட்டமானது War child Holland நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.