விளையாட்டுத் துறையை மேம்படுத்துவது குறித்து முன்னாள் விளையாட்டு அமைச்சர்களுடன் கலந்துரையாடல் – நாமல் பங்கேற்கவில்லை

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இலங்கையின் உள்ளூர் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவது தொடர்பாக முன்னாள் விளையாட்டு அமைச்சர்கள் குழுவுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

இது தொடர்பில் முன்னாள் விளையாட்டு அமைச்சர்கள் வழங்கிய யோசனைகள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நேற்று (புதன்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, காமினி லொகுகே, லக்ஷ்மன் கிரியெல்ல, ஜீவன் குமாரனதுங்க, தயாசிறி ஜயசேகர, நவீன் திஸாநாயக்க, பைசர் முஸ்தபா, ஹரின் பெர்னாண்டோ மற்றும் தேசிய விளையாட்டு சபையின் தலைவர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

எவ்வாறிருப்பினும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Published from Blogger Prime Android App