நவராத்திரி விழா ஆரம்பம்.
உலகெங்கும் வாழும் இந்துக்களால்
நவராத்திரி விழா இன்று (26) முதல் அனுஸ்ரிக்கப்படுகின்றது எதிர்வரும் அக்டோபர் 5ஆம் திகதி வரை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி பண்டிகையின் முக்கியத்துவம் பற்றி நோக்குகையில்


நவராத்திரி பண்டிகை துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய 3 பெண் கடவுளை போற்றி வழிபடும் விழாவாகும். பெண் தெய்வ வழிபாட்டில் நவராத்திரி முக்கியமானது.  நவராத்திரி பண்டிகை இந்துகளால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 9 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையின் முதல் மூன்று நாட்கள் துர்க்கை, அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி, கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை வழிபடுவார்கள். பத்தாம் நாள் வழிபாடு  'விஜயதசமி’ என்று கொண்டாடப்படுகிறது.