“இந்த இரண்டாண்டு காலத்தில், ராஜபக்சேக்கள் திருடுகிறார்கள் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். நம்பினால் நாட்டைப் பற்றிய அறிவும், அரசியல் அறிவும், ஆட்சி அறிவும் இல்லாதவர். ஏனெனில் கடந்த இரண்டு வருடங்களில் யாரும் திருட்டு குற்றச்சாட்டிற்கு ஆளாகவில்லை. கடந்த காலங்களில், வேறு வகையான குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது இருந்தன. இம்முறை ராஜபக்சே அரசுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டு கூட முன்வைக்கப்படவில்லை. கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச இன்னும் கட்சியுடன் பலமாக இருக்கிறார். அந்த பலத்துடன் கட்சி எந்த பிரச்சனையும் இல்லாமல் முன்னேறி வருகிறது” என தெரிவித்துள்ளார்.
கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது நேற்று (11) கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
