இவ்விவகாரம் குறித்து நாற்பது வருட காலத்திற்கு மேலாக இந்த நாட்டில் நியாயத்தை, நீதியை வேண்டி போராடுகின்ற எல்லாத் தரப்பினரும் இதற்கு எதிராக குரலெழுப்பி வந்திருக்கிறார்கள்.
அடிக்கடி உலக மனிதநேய அமைப்புகள், உலக நாடுகள் இதை திருத்தியமைக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்த போதிலும் அவ்வப்போது திருத்தங்களை கொண்டு வருவோம் என்று பொருத்தம் கொடுத்த போதிலும் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் எதையுமே சாதித்ததாக இல்லை.
இந்த விவகாரம் குறித்த அழுத்தம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது, ஆனால் உள்நாட்டிலே இது சம்பந்தமான விழிப்புணர்ச்சியை இன்னும் கூடுதலாக முன்கொண்டு செல்வதற்கான உகந்த சூழல் கடந்த சில மாதங்களாக நடந்த மக்கள் எழுச்சி போராட்டத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, இந்த பிண்னணியில் அண்மைக்கால ஆட்சியாளர்களின் அநியாயமான கைதுகளைப் பார்க்கின்றபோது வேண்டுமென்று இந்த புரட்சி செய்த இளைஞர்கள் ,அதற்கு தலைமை தாங்கிய நடிகைகள், இன்னும் தொழிற்சங்க பிரதிநிதிகளையெல்லாம் அடக்கி ஒடுக்குவதற்காக இந்த அரசாங்கம் மீண்டும் இதை பிரயோகிக்க ஆரம்பித்திருப்பது ஆபத்தானது .
அவசரமாக தடுத்து நிறுத்தவேண்டிய ஒரு கட்டமாக இது மாறியிருக்கிறது.
இந்த பிண்னணியில் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த பயங்கரவாத தடுப்புச்சட்டம் இல்லாமல் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாது என்ற ஒரு போலியான வாதத்தை முன்வைக்கும் அதேவேளை இந்த நாட்டின் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான அடிப்படை தேவையொன்று பொலிஸாரும் மறுபுறத்தில் சட்டமா அதிபர் திணைக்களமும் கூறிவருகிறது. அவர்கள் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.
மேலும், அவர்களும் இலகுவாக குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்து அதன் மூலம் தங்களுக்கு சாதகமான முடிவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு இதில் இருக்கிற மிக மோசமான சட்டவழிமுறைகள் வழிகோலாகிறது. என்பதால் இதை விட்டுக் கொடுப்பதற்கு அங்கும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்தப் பிண்னணியில் இது சம்பந்தமான சரியான புரிந்துணர்வு இன்று சர்வதேச மட்டத்திலும் ஏற்பட்டிருக்கிறது.
அண்மைக் காலமாக இதை நியாயப்படுத்துவதற்கு அண்மையில் நடந்த ஈஸ்டர் குண்டுத் தாக்குதலையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்தப் பயங்கரவாதம் ஒரு இஸ்லாமிய தீவிரவாதம் இந்த நாட்டில் ஊடுருவிவிட்டது என்ற ஒரு மாயையை உருவாக்குவதற்காக கூலிக்கமர்த்தப்பட்ட ஒரு படையினரை வைத்து இந்த நாட்டின் உளவுத்துறைதான் இதை செய்ததோ என்ற பாரிய சந்தேகம் எழ ஆரம்பித்திருக்கிறது.
இப்படியெல்லாம் பலவாரான சந்தேகங்களுக்கான சரியான நிவாரணங்களோ, அதற்கான எந்த விடைகளோ கிடைக்காத நிலையில் இது சம்பந்தமாக அடிக்கடி அப்பாவிகள் தண்டிக்கப்படுவதும், அப்பாவிகள் சிறையில் அடைக்கப்படுவதும், நிறைய நிரபராதிகள் கொலையுண்டதற்கு இது காரணமாகவிருந்திருக்கிறது.
எந்தவிதமான திடீர்மரண விசாரணைகளுமில்லாமல் சடலங்களைக் கொண்டுபோய் புதைக்கலாம் என்ற அனுமதியையும், மேலும் இதனூடாக அவர்கள் கடந்த காலங்களில் இந்த அவசரகால சட்டத்தில் அதற்கேற்ற ஏற்பாடுகளை உட்புகுத்தி, அதனை பாவித்து இதையெல்லாம் செய்து கொண்டார்கள்.
எனவே இந்த அரசாங்கம் இப்படியான ஒரு மாயையில் மக்களை வைத்துக் கொண்டு, இன்று உருவாகியிருக்கின்ற புதிய சூழலில் பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதில் இருக்கிற சிக்கல்களுக்கு விடைதேட முடியாமல் அதற்கு பகரமாக எழுகின்ற மக்கள் எழுச்சையை தடுப்பதற்காக, அடக்குவதற்காக இதை பாவிக்கின்ற இந்த அநியாயமான நடைமுறைக்கு இந்த அரசாங்கம் இனிமேலும் முன்வருமாகவிருந்தால் அதற்கெதிராக மக்களைத் திரட்டி போராடுவதற்கு ஒரு அவசியமான விடயமாக இந்த நடமாடும் எதிர்ப்பு போராட்டம் ஆரம்பித்திருக்கிறது.
இந்த நடமாடும் எதிர்ப்பு போராட்டத்தை மாவிட்டபுரம் இருந்து ஆரம்பிப்பதற்கு நாங்களும் வருகை தந்திருப்பதற்கான காரணம் இதில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்திற்கு முழு ஆதரவையும் கொடுக்கவேண்டும் என்பதற்காகும்
