மக்கள் வலியால் கண்ணீர் வடிக்கும் போது நாட்டைக் குட்டிச்சுவராக்கிய மொட்டு அமைச்சர்கள் வெற்றி களிப்பில்

220 இலட்சம் மக்கள் கண்ணீர் வடிக்கும் போது நாட்டைக் குட்டிச்சுவராக்கிய மொட்டு அமைச்சர்கள் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்.
தாங்க முடியாத அழுத்தத்தினால் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் வலியால் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்ற மொட்டு அமைச்சர்கள் வெற்றிக்களிப்பில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

37 இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பதன் மூலம் இந்நாட்டின் வரி செலுத்துவோரின் பணம் அவர்களின் பராமரிப்புக்காக பயன்படுத்தப்படுவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ராஜபக்சர்களை பாதுகாப்பதற்காக தற்போதைய ஜனாதிபதி கூட இந்நாட்டு மக்களை அடக்கி ஒடுக்கி வருகிறார் எனவும் தெரிவித்தார்.

இந்த கொடூர அடக்குமுறைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பன ஒட்டுமொத்த மக்களுடன் ஒன்றிணைவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நாட்டின் கலைஞர்களையும், இந்நாட்டு மாணவர்களையும், இந்நாட்டின் இளம் தலைமுறையினரையும் அரச மிருகத்தனம் மற்றும் அரச பயங்கரவாதத்தின் ஊடாக அடக்கி ஒடுக்கும் கோழைத்தனமான முயற்சியை அரசாங்கம் அமுல்படுத்தி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசு பயன்படுத்துவதைக் கண்டிப்போம், அது எதிர்ப்பை நசுக்கும் ஜனநாயக விரோத செயல்திட்டமாகும். பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது உட்பட தற்போதைய அரசாங்கத்தின் ஜனநாயக விரோத மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக "சுதந்திரத்திற்காக குரல் கொடுப்போம்"எனும் கருப்பொருளில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டுப் பிரகடன வெளியீடு நேற்று (09) நூலக மன்றக் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இந்நாட்டு மக்கள் தாங்கள் அனுபவித்த அடக்குமுறைகளுக்கு எதிராகவே எழுந்து நின்றனர் எனவும், நீதியான நாட்டையே விரும்பியதாகவும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இன்று ராஜபக்ச குடும்பத்தைப் பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Published from Blogger Prime Android App