மருத்துவ ஆலோசனையின்றி விருப்பத்தின் பேரில் சிகிச்சை பெற வேண்டாம் என வலியுறுத்து!

நாட்டில் அண்மைய காலமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் மருத்துவ ஆலோசனையின்றி விருப்பத்தின் பேரில் சிகிச்சை பெற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

டெங்கு, கொரோனா, இன்புளுவன்சா மற்றும் பல்வேறு வைரஸ் காய்ச்சல்கள் தற்போது பரவி வருவதால், அவற்றை சரியாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

எனவே மருத்துவ பரிந்துரைகள் இன்றி சிகிச்சை எடுப்பது மிகவும் ஆபத்தானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மழையுடன் கூடிய காலநிலையுடன், டெங்கு, கொரோனா மற்றும் இன்புளுவன்சா நோய்களின் பரவல் அதிகரிக்கக்கூடும்.

எனவே மிகவும் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Published from Blogger Prime Android App