பட்டதாரி சங்கப் பிரதிநிதிகள் கல்வி அமைச்சருடனான சந்திப்பு


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் வகிக்கும் பட்டதாரி சங்கத்தினர் அண்மையில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவை சந்தித்திருந்தனர்.

இதன் போது பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்கான நேர்முகத் தேர்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டு பின்னர் காலவரையறையின்றி நிறுத்தப்பட்டது.கல்வி அமைச்சரவர்கள் சில ஊடக சந்திப்புக்களின் போது போட்டிப் பரீட்சை ஒன்றின் மூலம் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதாக கூறியிருந்தார்.எப்போது இடம்பெறும் என்ற தகவலை வெளியிடவில்லை.இவ்விடயம் சம்பந்தமாக அமைச்சரை வினவியபோது டிசெம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் பரீட்சைகள் வைத்து ஆசிரியர் சேவைக்குள் இணைப்புச் செய்யப்படுவீர்கள் என்ற கருத்தை கூறியிருந்தார்.

அடுத்ததாக ஆசிரியர் சேவையில் இணைப்பு செய்வதற்காற வயதெல்லை 35-45 என்ற விடயம் வலியுறுதப்பட்டதோடு பாடசாலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்று ஆசிரியர் பணியில் உள்ள ட்டதாரிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும்.அந்தவகையில் நாடளாவிய ரீதியில் 8000அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் பணியில் உள்ளனர்.அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.2 கிழமைக்குப் பின்னர் அமைச்சரவைப் பத்திரங்கள் வெளியிடப்படும் என்ற தகவல்கள் தெருவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.