பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (01) அமைச்சின் அறிவிப்பை முன்வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமெரிக்காவினால் வழங்கப்பட்ட உணவு பொருட்கள் தொடர்பில் இந்த பாராளுமன்றத்தில் கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன.
சில ஊடகங்களும் இதனை பிரசாரப்படுத்தி இருந்தன. இவ்வாறான உதவிகள் இப்போது மட்டுல்ல நாங்கள் பாடசாலை செல்லும் காலத்திலும் அமெரிக்காவினால் வழங்கிய மாவினால் ஆன பிஸ்கட்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் யுனிசெப் போன்ற அமைப்புகள் பிள்ளைகளின் போசனை மட்டம் தொடர்பில் ஆராய்ந்து போசனைகளை அதிகரிப்பதற்காக வேலைத் திட்டங்களை முன்வைக்கின்றன.
இதன்படி ஏதேனும் உதவிகள் கிடைத்தால் அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும். அமெரிக்காவும் உதவிகளை வழங்கியுள்ளது. அவற்றை பொறுப்பேற்றேன்.
என்றாலும் இதனை வேறு வகையில் சிலர் குறிப்பிடுகின்றனர். ஆனால் நான் பிச்சையெடுத்தாவது பிள்ளைகளுக்கு உணவை வழங்க முடியுமென்றால் அதனை நான் செய்வேன்.
மாணவர்களுக்கு போசனைகளை அதிகரித்து கல்வி வளர்ச்சிக்கு என்ன செய்ய முடியுமோ அதற்காக முடிந்தளவுக்கு பங்களிப்பை வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றேன் என்றார்.