நாட்டில் இடம்பெறும் கைதுகள் யாவும் சட்டபூர்வமாக இடம்பெறுகின்றது – ஜனாதிபதி

நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு நான் தீர்வை காணவேண்டும் என விரும்புகின்றனர் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடங்களுக்கு வழங்கியுள்ள பேட்டியிலே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

அரசாங்க இல்லங்களை எரிப்பதன் மூலம் பிரச்சினைகளிற்கு தீர்வை காணமுடியாது என குறிப்பிட்டுள்ள அவர் ஜனாதிபதியின் இல்லத்தை ஆக்கிரமித்தவர்கள் அல்லது எனது வீட்டை எரித்தவர்கள் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிற்கு தீர்வை கண்டிருக்கமாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தை நாடுங்கள் என நானே தெரிவித்தேன் இதன் காரணமாகவே என்னை ஆதரிப்பது குறித்து நம்பிக்கை காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் சட்டத்தை மீறியவர்களே கைதுசெய்யப்படுகின்றனர் இந்த கைதுகளை நான் செய்யவில்லை பொலிஸாரிடம் விட்டுவிட்டேன் அனைத்தும் சட்டபூர்வமாக இடம்பெறுகின்றது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.


Published from Blogger Prime Android App