ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மலலசேகர மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்று சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றதாக அறியப்படுகிறது.
இருவருக்குமிடையில் குறுகிய கால கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.