சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு அதிகரித்துள்ளது !

பயிர் சேதத்திற்கு அரசாங்கம் வழங்கும் இழப்பீட்டுத் தொகையை ஹெக்கர் ஒன்றுக்கு 150,000. ரூபாவாக உயர்த்த விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு விவசாய காப்புறுதி சபைக்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.

நெல், மிளகாய், மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டால் இதுவரை ஏக்கருக்கு 40,000.ரூபா வழங்கப்பட்ட நிலையில்.அந்த தொகையை 60,000.ரூபாவாக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Published from Blogger Prime Android App