அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் போது மிக அவதானம் !

இலங்கையில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களை குறைந்த நிறையில் உற்பத்தி செய்து ஏமாற்றும் மோசடி வர்த்தகம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

பிஸ்கட், சவர்க்காரம் பற்பசை, மிளகாய்த் தூள், மசாலா தூள் போன்ற பொருட்களில் இந்த மோசடி இடம்பெறுவதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

எடையைப் பொருட்படுத்தாமல் விலை குறைவாக இருப்பதாக நினைத்து கொள்வனவு செய்வோர் பணத்தை இழக்கிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில உற்பத்தியாளர்கள் இந்த பொருட்களை சலுகை என்று விளம்பரம் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்வதாகவும், ஆனால் சாதாரண விலையுடன் ஒப்பிடுகையில், அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சில வகையான பிஸ்கட்கள் 50, 60, 70 கிராம் போன்ற சிறிய பக்கெட்டுகளில் தயாரிக்கப்பட்டு, விலை குறைவு என்ற போலிக்காரணத்தில் சந்தையில் வெளியிடப்பட்டு, நுகர்வோருக்கு நன்மை பயக்கும் என உற்பத்தியாளர்கள் விளம்பரம் செய்கின்றனர்.

நுகர்வோரை ஏமாற்றி சவர்க்காரம், மிளகாய் போன்ற மசாலாப் பொதிகளும் மக்களை இவ்வாறு ஏமாற்றி விற்பனை செய்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Published from Blogger Prime Android App