அத்துடன், கட்சியின் கொள்கை அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, கட்சியின் கொள்கைகளையும், கட்சியையும் பாதுகாத்த மக்களுக்காக தொடர்ந்தும் பாடுபடுவேன் எனவும் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையில் புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
