நாடு திரும்பினார் ஜனாதிபதி!


மறைந்த 2வது எலிசபெத் மகாராணியின் இறுதி சடங்கிற்கு சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.

அவர் இன்று(புதன்கிழமை) காலை நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தனது இந்த விஜயத்தின் போது பிரித்தானியாவில் உள்ள இலங்கையர்களையும் சந்தித்து பேசியிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.