இருளால் சூழ்ந்த நாட்டிற்கு வெளிச்சத்தை கொண்டு வருவதில் பெரும் பங்கு பெண்களுக்கே உண்டு : சஜித்

இருளால் சூழ்ந்த நாட்டிற்கு வெளிச்சத்தை கொண்டு வருவதில் பெரும் பங்கு பெண்களுக்கே உண்டு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் ஏற்பாட்டில், பெப்ரல் அமைப்பின் முன்நிலை அனுசரணையில், ஜனநாயகம், தலைமைத்துவம் மற்றும் பெண்கள் எனும் கருப்பொருளில் இடம்பெற்ற விசேட மக்கள் சேவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலையே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார். 

பாராளுமன்றில் 25வீதம் பெண் பிரதிநிதித்துவம் கட்டாயம் இடம் பெற வேண்டியதொன்றாகும் என அவர் மேலும் தெரிவித்தார். தற்காலத்தில் பெண்கள் பல சவால்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட கடுமையான பல பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர் எனவும் தெரிவித்தார். 

மனித வாழ்வில் பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றில் பெரும் பங்கு வகிப்பது பெண்களே எனவும் அவர்கள் ஆற்றும் பங்கு அளவிட முடியாதது எனவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
Published from Blogger Prime Android App