டொலரை செலுத்தியவர்களுக்கு மட்டுமே சிலிண்டர் விநியோகம்: புதிய எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட மாட்டாது!உள்நாட்டு சந்தைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை புதிய எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், இலங்கையில் வசிக்கும் அவர்களது உறவினர்களுக்காக புதிய எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் நடைமுறையின் காரணமாக அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதே இதற்கு காரணமாகும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாடு எதிர்நோக்கியுள்ள டொலர் நெருக்கடிக்கு தீர்வாக லிட்ரோ நிறுவனம் அண்மையில் இந்த நடைமுறையை அறிமுகப்படுத்தியது.

அதற்கமைய, வெளிநாடுகளில் உள்ள சில இலங்கையர்கள் இலங்கையில் வசிக்கும் அவர்களது உறவினர்களுக்காக டொலரை செலுத்தி புதிய சிலிண்டர்களை முன்பதிவு செய்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.