இதன்படி, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவரின் மேல்முறையீட்டு மனுக்களை பரிசீலிக்கும்போது, அந்த நபர் காவலில் இருந்த நேரத்தையோ அல்லது அதில் ஏதேனும் ஒரு பகுதியையோ ஒரு பகுதியாகக் கணக்கிட அனுமதிக்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்வது நல்லது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் உள்ள சிறப்புப் பிரிவின் குற்றவியல் துணைக் குழு அந்தப் பரிந்துரைகளை செய்துள்ளது.
இதன்படி, 1979 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 323(5) ஆவது பிரிவைத் திருத்துவதற்கான சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு ஆலோசனை வழங்குவதற்கு நீதி அமைச்சர் உரிய யோசனையை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளார்.
