பாதுகாப்பு தலைமையக வளாகத்திற்குள் முன்னாள் படைவீரர்களுக்கு அலுவலகக் கட்டிடம் : கமல் குணரத்ன

இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்திற்கான முழுமையான நிரந்தர அலுவலகக் கட்டிடத்தை பாதுகாப்பு தலைமையக வளாகத்திற்குள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன குறிப்பிட்டார்.

இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் 78 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைவாக 175 பேர்ச் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு அரச நிதி பயன்படுத்தப்படமாட்டாது எனவும் அவர் கூறினார்.

மேலும் யுத்தத்த காலத்தின் போது உயிரிழந்தவர்கள் மற்றும் தாய்நாட்டை பாதுகாப்பதற்காக அவர்கள் ஆற்றிய உன்னத சேவைகளையும் பாதுகாப்புச் செயலாளர் நினைவு கூர்ந்தமை குறிப்பிடதக்கது.

Published from Blogger Prime Android App