கடந்த ஜூன் மற்றும் ஜுலை மாதங்களில் மேற்படி தொகையை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு இம்மாதத்தில் கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
அது தொடர்பில் அமைச்சு தெரிவிக்கையில், நிதி கிடைக்காமை காரணமாக கர்ப்பிணித் தாய்மாருக்கு போஷாக்கு உணவுக்கான கொடுப்பனவு வேலைத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்ததாகவும் எனினும் தற்போது அதற்கான நிதி கிடைத்துள்ள நிலையில் சில கட்டங்களாக நாடளாவிய ரீதியில் அந்தக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை, கர்ப்பிணித் தாய்மாருக்கு போஷாக்கு உணவுக்காக வழங்கப்பட்டு வரும் கொடுப்பனவை அதிகரிப்பதற்கான யோசனை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
