திலீபன் நினைவேந்தல் ஊர்திப் பவணி அம்பாறையில் நிறைவு !

தியாக தீபம் திலீபனின் 35 வது நினைவேந்தலை முன்னிட்டு அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த வியாழக்கிழமை (15) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பொத்துவில் தொடக்கம் நல்லூர் வரையான திலீபன் நினைவு ஊர்திப் பயணம் பொத்துவிலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் அம்பாறை மாவட்டத் தலைவர் துசானந்தன் ஏற்பாட்டில் இவ்வூர்திப் பவணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டு குறித்த ஊர்திப் பவனியை ஆரம்பித்து வைத்தனர்.

தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி, இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நீதி, அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கு, பௌத்த சிங்கள மயமாக்கலை நிறுத்த போன்ற தமிழர்களின் அபிலாசைகளை முன்வைத்து திலீபன் வழியில் வருகின்றோம் என்ற தொனிப்பொருளில் மேற்படி ஊர்திப் பவணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பொத்துவில்லில் ஆரம்பிக்கப்பட்ட இப்பவணியானது வடக்கு கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் அனைத்து மாவட்டங்கள் ஊடாகவும் பயணித்து இறுதியில் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவுத் தூபி வரை சென்று நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மாலை அம்பாறை மாவட்டத்தின் பாண்டிருப்பு திரௌபதை ஆலயத்தை வந்தடைந்து மக்கள் அஞ்சலியுடன் அம்பாறை மாவட்ட இவ்வூர்திப் பவணி நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Published from Blogger Prime Android App