இலங்கைக்கு கடன் வழங்குவதில் சீனாவைவிட இந்தியா முன்னிலையில் உள்ளதாக தெரிவிப்பு!

இலங்கைக்கு கடன் வழங்குவதில் சீனாவை விட இந்தியா முன்னிலையில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி இந்த வருடத்தின் நான்கு மாதங்களில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய கடன் தொகை 968 மில்லியன் டொலர்களாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையில் இலங்கைக்கு சீனா 947 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கியுள்ளது.