ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதில் சவால்கள் !

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதில் இலங்கை பல சவால்களை எதிர்நோக்குவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.


எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு உள்ள தடைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிதி நிலை, எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு பணம் செலுத்தத் தவறியமை நாட்டின் வங்கி அமைப்பில் இருந்து கடன் கடிதங்களை திறக்க முடியாமை அதற்கான காரணம் என கூறினார்.

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய 12 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு ஆர்டர்களுக்கான ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த 3 மாதங்களுக்குள் எந்த நிறுவனமும் எங்களிடம் முன்பதிவு செய்யவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.