பழுகாமப் பரம்பரை ஒன்றியத்தினால் புலமைப் பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள் பொதிகள் வழங்கி வைப்பு!
பழுகாமப் பரம்பரை ஒன்றியத்தினால் புலமைப் பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள் பொதிகள் இன்று(13) வழங்கி வைக்கப்பட்டன      இம்முறை தரம்-5 புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்ற இருக்கின்ற போரதீவுப் பற்று கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களின் அடைவு மட்டத்தினை அதிகரிக்கும் நோக்கில் மாதிரி வினாத்தாள் பொதிகள், போரதீவுப் பற்றில் கல்வி அபிவிருத்தியில் அர்ப்பணிப்போடு இயங்கி வரும்" பழுகாமப் பரம்பரை ஒன்றியம்" தின் அனுசரணையில் பட்டிருப்பு வலையக்கல்வி பணிமனையில் வைத்து  வழங்கி வைக்கப்பட்டன.இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக்கல்வி பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார்,ஆரம்பப் பிரிவிற்கான உதவிக்கல்விப் பணிப்பாளர் பா.வரதராஜன் மற்றும் போரதீவுபப் பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர்,அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.