தொலைபேசி சேவை வழங்குநர்கள் மற்றும் தொலைகாட்சி சேவை வழங்குநர்களுக்கு தமது சேவை கட்டணத்தில் அதிகரிப்பை மேற்கொள்வதற்கு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, நிலையான தொலைபேசிகள், கையடக்கத் தொலைபேசிகள், செய்திமதி தொழில்நுட்ப தொலைகாட்சி சேவைகள் மற்றும் கேபல் தொலைகாட்சி சேவைகளுக்கு இவ்வாறு கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக இந்த கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளைய மறுதினம் (செப்.05) முதல் இந்த சேவை கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய, கையடக்கத் தொலைபேசிகள், நிரந்தர தொலைபேசிகள், இணைய வசதிகளுக்கான கட்டணங்கள் 20 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளது.