மகாராணிக்கான இரங்கல் புத்தகத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டார் !

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்வார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு சென்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனைச் சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் வைக்கப்பட்டுள்ள விசேட அனுதாபப் புத்தகத்தில் ஜனாதிபதி இரங்கல் குறிப்பையும் எழுதினார்.
Published from Blogger Prime Android App