பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு எதிரான போராட்டம் யாழில் ஆரம்பம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு எதிரான போராட்டம் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையின் மாவிட்டபுரம் பகுதியில் இன்று காலை தொடங்கியது.
நாட்டின் 25 மாவட்டங்களையும் சென்றடையவுள்ள குறித்த போராட்டத்தின் போது பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்துப் பெறும் போராட்டம் நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாவிட்டபுரம் முருகன் ஆலயச் சூழலில் தொடங்கியுள்ள போராட்டத்தில் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், புளொட் கட்சித் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் உட்பட அரசியல் பிரமுகர்கள் பங்கு கொண்டுள்ளனர்.


Published from Blogger Prime Android App