வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்காதிருக்க சஜித் மற்றும் டலஸ் தரப்பு தீர்மானம்!

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் வாக்களிப்பதை தவிர்க்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, அண்மையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்ட டலஸ் அழகப்பெரும தலைமையிலான குழுவும் இன்று நடைபெறவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் வாக்களிப்பதை தவிர்க்க தீர்மானித்துள்ளது.

இதனை நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று பிற்பகல் நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் தமது தீர்மானத்தை வெளியிடவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
Published from Blogger Prime Android App