நிதிப் பற்றாக்குறை: சேவைகளை முன்னெடுப்பதில் அரச நிறுவனங்கள் திண்டாட்டம் !

நிதிப் பற்றாக்குறை காரணமாக அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலைமை காரணமாக அந்த நிறுவனங்களின் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக பல முக்கிய அமைச்சுக்களின் செயலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சில நிறுவனங்களில் அன்றாட நடவடிக்கைகளுக்குத் தேவையான எழுதுபொருட்கள், மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்குவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

அமைச்சுக்கள் புதிய திட்டங்களை ஆரம்பிப்பது மட்டுமன்றி, ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களையும் பராமரிக்க முடியாமல் திணறி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், சுகாதாரம், கல்வி, நெடுஞ்சாலைகள், வீட்டுவசதி போன்ற அமைச்சுக்களின் ஒப்பந்ததாரர்கள் மற்றும் சப்ளையர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை இருபதாயிரம் கோடிக்கும் அதிகமாக உள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல அரச நிறுவனங்களில் ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்கும் கடுமையான நெருக்கடி காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published from Blogger Prime Android App