கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் மூடப்படுகிறது. !
வெளிநாடுகளில் உள்ள அந்நாட்டின் தூதரக வலையமைப்பு தொடர்பில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்ள நோர்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் உட்பட ஐந்து நோர்வே தூதரகங்களை 2023 ஜூலை இறுதிக்குள் நிரந்தரமாக மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, ஐரோப்பாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள பல நோர்வே தூதரகங்களை வலுப்படுத்துவதை உள்ளடக்கியுள்ளதாக நோர்வே வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுள்ளது.

இதேவேளை கொழும்பில் உள்ள தூதரகத்தை மூடும் முடிவு நோர்வேக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என நோர்வே வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது

மாலைதீவு தொடர்பான பொறுப்புகள் கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்திற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது