விளையாட்டு என் இரத்தத்தில் உள்ளது – நாமல் !

இலங்கை கிரிக்கெட் அணி ஆசியக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், இது வெற்றிகளின் ஆரம்பம் என்றும் இன்னும் பல வரவுள்ளன என்றும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

விளையாட்டுத் துறை அமைச்சர் யார் என்பது முக்கியமில்லை என்றும் அமைப்பில் தலையிடாவிட்டால் வெற்றிகள் அதிகம் என்றும் அவர் கூறினார்.

புதிய அணித்தலைவரை கொண்டு வந்த பின்னர், இலங்கை அணி போட்டிகளில் தோல்வியை சந்திக்கும்போது தான் விமர்சித்ததாகவும் முன்னாள் அமைச்சர் கூறினார்.

“விளையாட்டு என் இரத்தத்தில் உள்ளது, நான் விளையாட்டை மீண்டும் கட்டியெழுப்ப கடுமையாக உழைத்தேன். என்னை உருவாக்க அல்ல“ என்றும் அவர் தெரிவித்தார்.

அமைப்பில் யாராவது தலையிடும்போது வீரர்கள் விளையாடுவது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார்.

Published from Blogger Prime Android App