நீர் கட்டணத்தை செலுத்தாத எம்.பிக்களின் வீடுகளுக்கான நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை

நீர் கட்டணத்தை செலுத்தாத பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கான நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆலோசனை கிடைத்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை(NWSDB) தெரிவித்துள்ளது.

நீர் கட்டணங்களை செலுத்தாத பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை சபாநாயகருக்கு இன்று(15) அனுப்பவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வர்த்தகப் பிரிவின் பிரதி பொது முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களால் சுமார் 3 மில்லியனுக்கும் அதிக கட்டணம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக அவர் இதன்போது கூறியுள்ளார்.
Published from Blogger Prime Android App