ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மனு தாக்கல் !

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சந்தேக நபராக தம்மை பெயரிட்டு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பாணையை இரத்து செய்யுமாறு கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் நடைபெறவுள்ளதாக தகவல் கிடைத்தும் அதனை தடுக்க தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தேக நபராக பெயரிட்டு எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published from Blogger Prime Android App