பயங்கரவாத தடைச் சட்டம் : மனித உரிமை பேரவைக்கு கொண்டு செல்லும் புலம்பெயர் முஸ்லீம்கள் !

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக தற்போது அமுல்படுத்தப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து புலம்பெயர் முஸ்லிம்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜெனீவாவில் இன்று இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 51வது கூட்டத்தொடரில் தாம் எதிர்கொண்ட மனித உரிமை மீறல்கள் குறித்து எடுத்துரைக்கவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

புலம்பெயர் முஸ்லிம் பேரவையின் சர்வதேச விவகார ஒருங்கிணைப்பாளர் அய்யூப் அஸ்மின் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக 300 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பல மாதங்களாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பல முஸ்லிம் அமைப்புகளுக்கான தடைகள் தொடர்வதாகவும் இந்த சட்டத்தால் முஸ்லிம்கள் பல்வேறு மனித உரிமை மீறல்களை எதிர்நோக்கி வருவதாகவும் கூறியுள்ளார்.

எனவே இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மனித உரிமைகள் பேரவை தொடர்ந்து அமுல்படுத்த வேண்டும் என்றும் வலியறுத்தியுள்ளார்.
Published from Blogger Prime Android App