வன ஜீவராசிகள் அமைச்சரின் வாகனம் கட்டுப்பட்டை இழந்து விபத்து - மான் உயிரிழப்பு !

உடவலவை தேசிய பூங்காவிற்கு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர விஜயம் செய்த போது, ​​மான் ஒன்று அவரது வாகனத்தில் மோதி உயிரிழந்துள்ளது.

பூங்காவில் வாகனத்தை அதிவேகமாக செலுத்தியதாலும், சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதாலும் வாகனம் மான் மீது மோதியதுடன் வாகனத்தின் கண்ணாடியும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய பூங்கா எல்லைக்கு வெளியே இவ்விபத்து நடந்ததாக கூறியுள்ளார்.

உடவலவ தேசிய பூங்கா வட்டாரத்தின் தகவல்களின்படி, பூங்காவிற்குள் இச்சம்பவம் நடந்துள்ளது . மேலும், மாலை 6 மணிக்கு மேல் பூங்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இரவு 8 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளதாகவும் இரவு 11 மணியளவில் வாகனம் பூங்காவிலிருந்து வெளியே வந்ததாகவும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
Published from Blogger Prime Android App