அதிர்ச்சியை ஏற்படுத்தும் இலங்கை குறித்த உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய அறிக்கை !n

இலங்கையின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால் அவதிப்படுவதாகவும், இன்னும் இலங்கையில் உள்ள 10 குடும்பங்களில் 8 குடும்பங்கள் உணவைத் தவிர்க்கிறார்கள் அல்லது நெருக்கடியைச் சமாளிக்க கடன் வாங்கி உணவை பெறுவதாகவும் உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய அறிக்கை குறிப்பிடுகிறது


பெண் தலைமைத்துவ குடும்பங்களில் இந்த நிலைமை மோசமாக இருப்பதாக உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் நிலவும் உணவு நெருக்கடியானது கிராமப்புற மக்களை விட நகர்ப்புற மற்றும் பெருந்தோட்ட மக்களையே அதிகம் பாதிக்கிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

அந்த அறிக்கையின்படி, 3.4 மில்லியன் இலங்கையர்களை ஆதரிப்பதற்கு தேவையான 63 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 35 வீதமே கிடைத்துள்ளது.

உலக உணவுத் திட்டம் இலங்கையின் சனத்தொகையில் 6.3 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பற்றவர்களாகவும் குறைந்தது 66,000 பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பற்றவர்களாகவும் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.