கொரியாவில் வேலை வாய்ப்புகள் - மொழி புலமை, NVQ சான்றிதழ்கள் தேவையில்லை

கொரியாவில் வெல்டிங், கிரைண்டிங் போன்ற துறைகளுக்கு ஏராளமான தொழில் வாய்ப்புகள் இருப்பதாகவும், மொழிப் புலமை இல்லாவிட்டாலும் அதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.

NVQ சான்றிதழ்கள் போன்றவை இதற்கு தேவையில்லை என தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இத்துறையில் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் 45 வயதுக்கு குறைவானவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வேலைகளுக்கான சம்பளம் 8 1/2 இலட்சம் ரூபாவில் இருந்து ஆரம்பமாகிறது அத்துடன் துறையில் அனுபவமுள்ள ஆர்வமுள்ளவர்கள் நாவலயிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு பணியக அலுவலகத்திற்கு வந்து மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும். 

மேலும் வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்லும் போது அவர்களுக்கு அரச வங்கிகளில் கடன் வழங்கும் வேலைத்திட்டம் அமுலில் உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Published from Blogger Prime Android App